இந்தியாவை புறக்கணிக்கும் இலங்கை: விக்னேஷ்வரன் தகவல்
Posted: Sat,14 Apr 2018 12:20:54 GMT
இலங்கை வடக்கு மாகாண முதல் அமைச்சர் விக்னேஷ்வரன் தமிழ்நாடு வந்துள்ளார். நெல்லையில் நடைபெற்ர புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் பேசும்போது, “ இந்தியா போன்ற நாடுகளில் உள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை மாகாணங்களுக்கான அதிகார வரம்பு குறைவாகவே உள்ளது. அதிகார வரம்பு குறைவால் இலங்கை தமிழ் மக்களுக்கு முன்னேற்றங்களை ஏற்படுத்தவில்லை.
இலங்கை தற்போது சீனாவுடன் வெளிப்படையான நெருக்கம் காட்டுகிறது. சீனாவுடனான நட்பினால், இந்தியா- இலங்கை இடையேயான உறவு முன்பு போல் இணக்கமாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)