எச்.ராஜாவுக்கு மனநல சிகிச்சை கோரும் திருமாவளவன்
Posted: Sat,14 Apr 2018 12:17:48 GMT
மோடிக்கு கருப்பு கொடி காட்டிய போராட்டத்தில் ஈடுபட்ட சீமான், பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் ஆகியோர் தேச துரோகிகள் என்றும் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்திருந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “ எச்.ராஜாவைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் நன்று அறிந்தவர்கள், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதே அவரின் வழக்கம். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் எதை வேண்டுமானாலும் அநாகரிகமாக அறுவறுப்பாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அனைவராலும் போற்றப்படும் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தியவர் எனினும் அவர் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்யவில்லை, கைது செய்யவில்லை என்பது தான் வேதனைக்கு உரியது. தனிப்பட்ட முறையில் எங்கள் மீது குறிப்பாக என் மீது வைக்கும் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படவில்லை. எச். ராஜா பரிதாபத்திற்கு உரிய நிலையில் இருப்பதைக் கண்டு வேதனைப்படுகிறேன். அவருக்கு மனநல சிகிச்சை தேவைப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)