”சட்டீஸ்கரில் விமான நிலையம்”, மோடி உறுதி
Posted: Sat,14 Apr 2018 12:15:15 GMT
சட்டீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் நடைபெற்ற சுகாதார பாதுகாப்பு திட்டம் துவக்க விழாவில் மோடி கலந்து கொண்டார். அவ்விழாவில் பேசிய அவர், “நான் இந்த பகுதி வளர்ச்சிக்காக தற்போது வந்துள்ளேன். விவசாயிகள் நலனே எங்களின் உயிர் மூச்சு. இவர்கள் முன்னேற வேண்டும் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இது போல் மக்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துகிறோம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பழயை தத்துவங்கள் வளர்ச்சிக்கு உதவாது. அம்பேத்கர் கனவை நிறைவேற்ற பாடுபடுகிறோம், அவரது எண்ணங்களை செயல்படுத்தவே நாங்கள் உழைக்கிறோம். அம்பேத்கரால் தான் நான் பிரதமரானேன். புதிய வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5 லட்சம் வீதம் 50 கோடி மக்களுக்கு இந்த பலன் போய்ச்சேரும். வரும் 2022 ல் இந்தியா முழுவதும் சுகாதார மையங்கள் அமைக்கப்படும். சட்டீஸ்கரில் விமான நிலையம், இரும்பு தொழிற்சாலை, புதிய ரயில் பாதைகள் அமைக்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறோம்” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)