”மோடி அரசுக்கு அருகதை கிடையாது”, வைகோ பேச்சு
Posted: Sat,14 Apr 2018 11:28:28 GMT
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அங்கு கூடி இருந்தவர்கள் இடையே பேசிய வைகோ, “மோடி அரசுக்கு அம்பேத்கரை பற்றி பேச அருகதை இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும், “உலகத்தின் தலை சிறந்த அரசியல் சட்டங்களை எல்லாம் ஆய்வு செய்து, இந்திய அரசியல் சட்டத்தை இயற்றினார் அம்பேத்கர். மனு தர்ம சாஸ்திரம் ஒழிய வேண்டும் என அருமையான புத்தகம் எழுதினார்.
அம்பேத்கருக்கு நிகரான சட்ட மேதை யாரும் கிடையாது இந்து மதம் மிகவும் கொடுமையானது என முடிவு செய்து, நாகபுரியில் லட்சக்கணக்கான மக்களோடு புத்த மதத்தை தழுவினார். தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் அவர்களுக்காகப் போராடினார். அம்பேத்கர் படத்தை மைய மண்டபத்தில் எனது கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தில் வி.பி.சிங் திறந்து வைத்தார். டாக்டர் அம்பேத்கர் பெரியாரை நேசித்தார். பெரியார் டாக்டர் அம்பேத்கரை நேசித்தார். இன்று ஒரு மதம், ஒரு மொழி என இந்துத்துவா கொள்கையைத் திணிக்க முயற்சிக்கும் மோடி அரசுக்கு டாக்டர் அம்பேத்கரைப் பற்றிப் பேச அருகதை கிடையாது.அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழும் இந்தியாவில் சாதி சாயம் பூச மத்திய மோடி அரசு முயற்சிக்கிறது” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)