”மதவாதிகளின் எண்ணம் முறியடிக்கப்படும்.”, திருமாவளவன் பேச்சு
Posted: Sat,14 Apr 2018 11:27:56 GMT
டாக்டர் அம்பேத்கரின் 128வது பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ அம்பேத்கர் வரையறுத்த சட்டம் மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக இருக்கிறது. அம்பேத்கரின் சட்டம் வலுவானது அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று மதவாத சக்திகள் செயல்பட்டு வருகின்றன. அம்பேத்கரின் சட்டத்தை பலவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன, உச்சநீதிமன்றம் போன்ற அமைப்பின் மூலம் புதிய விளக்கங்களைத் தருவது புதிய புதிய தீர்ப்புகள் மூலம் பலவீனப்படுத்த நினைக்கிறார்கள்.
ஆனால் இந்த மதவாத நடவடிக்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. வரலாறு காணாத வகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் லட்சக்கணக்கில் வீதிக்கு வந்திருக்கிறார்கள். எனவே மதவாதிகளின் எண்ணம் முறியடிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)