Posted: Sat,14 Apr 2018 11:27:17 GMT
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய வாழ்த்துச்செய்தியை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று தமிழ் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க அதிபர் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சார்பில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் ஜே. சுல்லிவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உலகமெங்கும் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சார்பிலும், அமெரிக்க மக்கள் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். புத்தாண்டு வளங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதுடன், அமெரிக்க அரசுடனான கூட்டாளித்துவத்தை வளர்க்கட்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 0 Comment(s)
Be the first person to like this