இன்னாள் முதல்வரை குறை கூறும் முன்னாள் முதல்வர்
Posted: Sat,14 Apr 2018 11:23:30 GMT
புதுச்சேரி முன்னாள் முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி, புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டி பேசிய அவர், “, ”புதுச்சேரி மாநிலம், காரைக்கால் கடைமடை பகுதிக்குத் தேவையான காவிரி நீரைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு உரிய அழுத்தத்தைப் புதுச்சேரி அரசு தரவில்லை. கர்நாடக காங்கிரஸ் அரசை மனதில் கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி காங்கிரஸ் அரசு அழுத்தம் தரவில்லை.
விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பிரதமரிடம் நேரில் சென்று சந்தித்து வலியுறுத்துவேன். தமிழகம் வந்திருந்த பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக புதுச்சேரி முதல்வர் வலியுறுத்தியிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)