Posted: Sat,14 Apr 2018 07:04:09 GMT
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள் வாழ்த்துச்செய்தியில், “தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு மெத்தன போக்கை கடைபிடித்து வருவது காரணமாக, சமீபத்தில் சென்னை வந்த மோடிக்கு கருப்பு கொடி காட்டப்பட்டது. இந்நிலையில் தமிழர்களின் அனைத்து விருப்பங்களும் நிறிவேற வாழ்த்துக்கள் என மோடி தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
  • 0 Comment(s)
Be the first person to like this