மேனகா காந்தி கொந்தளிப்பு
Posted: Fri,13 Apr 2018 06:45:21 GMT
காஷ்மீர் மாநிலத்தில் சிறுமி ஆசிஃபாவுக்கு நடந்த கொடூரம் குறித்து தன்னுடைய கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார் மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “காஷ்மீரின் கத்துவா மற்றும் சமீபத்தில் நடந்த அனைத்து பாலியல் பலாத்கார வழக்குகளும் என்னை மிக கடுமையாக பாதித்துள்ளது. இது போன்ற சம்பவங்களை தடுக்க, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நானும் எனது அமைச்சகமும் நடவடிக்கை எடுப்போம்.
அதன்படி 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்க வழிவகை செய்யும் வகையில் அந்த திருத்தம் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)