சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி வெற்றி
Posted: Wed,11 Apr 2018 01:41:41 GMT
நேற்று பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா அணியை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
பூவா தலையா வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் தோணி, பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி, ஓவர்களில் விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. 20-20 போட்டிகளில் 200 மேற்பட்ட ரன்கள் என்பது துரத்த முடியாத இலக்கு ஆகும்.
203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிவரை போராடி 19.5வது ஓவரில் 203 ரன்கள் எடுத்து அதிரடி வெற்றியை பெற்றது.
  • Share
  • 0 Comment(s)