Posted: Mon,09 Apr 2018 11:54:49 GMT
ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி படுதோல்வியடைந்தது. இத்தோல்வி குறித்து பெங்களூர் அணித்தலைவர் விராட் கோலி அளித்துள்ள பேட்டியில், “ 15 ரன்கள் குறைவாக எடுத்தோம். நான் உட்பட ஏகப்பட்ட டாட் பால்கள் (ரன் இல்லாத பந்துகள்), நான் நிறைய பந்துகளை விரயம் செய்தேன்.
பகுதி நேர ஸ்பின்னரிடம் டிவில்லியர்ஸும் நானும் அடுத்தடுத்து அவுட் ஆனோம். அது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஆனாலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை இந்தப் போட்டியிலிருந்து நிறைய பாசிட்டிவ் அம்சங்களை எடுத்துக் கொள்கிறோம். ஸ்பின்னர்கள் பவுலிங் செய்வது கடினமாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் அளித்துள்ள பேட்டியில், “ஏ.பி.டிவில்லியர்ஸ், கோலி கடைசி வரை நின்றிருந்தால் கடினமாக அமைந்திருக்கும். ஆனால் எங்கள் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது. ரசிகர்கள் அபாரம், ரசிகர்களுக்காகத்தான் ஆடுகிறோம், இப்படிப்பட்ட ரசிகர்களுக்காகவும் இப்படிப்பட்ட அணிக்காகவும் ஆடுவதில் பெருமை அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this