பங்குச்சந்தை ஏற்றம்
Posted: Mon,09 Apr 2018 11:52:23 GMT
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. சரிவை சந்தித்த நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்ததால், முதலீட்டாளர்கள் அப்பங்குகளை அதிகம் வாங்க தொடங்கியுள்ளனர். இது பங்குச்சந்தையின் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாகும்.
அதே போல் ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றம் பெற்றுள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வை சந்தித்துள்ளன. காலை 9.15 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 136.45 புள்ளிகள் உயர்ந்து 33,763.42 புள்ளிகளாகவும், நிப்டி 47.65 புள்ளிகள் உயர்ந்து 10,379.25 புள்ளிகளாகவும் உள்ளன. உலோகம், கட்டுமானம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
கோட்டாக் வங்கி, யெஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஆசியன் பெயின்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி, பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐடிசி, விப்ரோ, மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. அதே சமயம் ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், இன்போசிஸ் ஆகிய நிறுவன பங்குகள் 2 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளன.
  • 0 comment(s)
Be the first person to like this.