சென்னை அடியில் சுருண்ட இந்தியன்ஸ்
Posted: Mon,09 Apr 2018 11:51:50 GMT
ஐபிஎல் போட்டிகளின் 11வது சீசன் நேற்று முன் தினம், மும்பையில் வண்ணமிகு தொடக்க விழாவுடன் ஆரம்பமானது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
பூவா தலையா வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் தோணி, பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சுதாரிப்பும் தடுமாற்றமும் கலந்த ஆட்டத்தை ஆடியது. கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் மூன்று பந்தை வீணடித்த சென்னை அணியின் ஜாதவ், அடுத்தடுத்த பந்துகளில் ஆறு மற்றும் நான்கு ரன்களை எடுத்து வெற்றியடைய வைத்தார், இரண்டு ஆண்டு தடைக்குப்பின் மீண்டும் இந்த ஆண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் ஆட்டத்திலேயே மாபெரும் வெற்றி பெற்று தன் கணக்கை தொடங்கியுள்ளது.
  • Share
  • 0 Comment(s)