பஞ்சாப் வெற்றி
Posted: Mon,09 Apr 2018 06:40:11 GMT
நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் அணி, டெல்லியை வெற்றி கொண்டது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப், டெல்லி அணிகள் மோதின. மொகாலியில் இப்போட்டியில் பூவா தலையா வென்ற பஞ்சாப் அணித்தலைவர் அஷ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 166 ரன்கள் எடுத்தது. 27 ரன்கள் எடுத்திருந்த மோரிஸ் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து ஆடிய பஞ்சாப் ஆணி, 18.5 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல் வென்றார் .
  • Share
  • 0 Comment(s)