ஐபிஎல்: பெங்களூரை வீழ்த்திய கொல்கத்தா
Posted: Mon,09 Apr 2018 06:35:13 GMT
கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரை விழ்த்தி வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா அணி.
பூவா தலையா வென்ற கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி முதலில் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 176 ரன்கள் எடுத்தது.
சற்றே கடினமாக இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி கோல்கட்டா அணி, 18.5 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக கொல்கத்தா அணியின் சுனில் நரைன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்போட்டியில் பெங்களூர் அணியில் விளையாடிய பிரண்டன் மெக்கலம், இதுவரையிலான 20-20 போட்டிகளில் தன்னுடைய 9000 ரன்களை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Share
  • 0 Comment(s)