குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Posted: Sat,07 Apr 2018 04:32:58 GMT
ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடன் வழங்கும் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுனர் உர்ஜித் பட்டேல் தலைமையிலான நிதிக்கொள்கை குழு, ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடன் வழங்கும் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தற்போது இருக்கும் வட்டி விகிதமான 6 சதவீதம் தொடரும் எனவும் அறிவித்துள்ளது.
இம்முடிவுக்கு குழுவில் உள்ள ஆறு பேர்களில், இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் மைக்கேல் பத்ரா தவிர மற்ற 5 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.
இதேபோன்று ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் மாற்றமின்றி 5.75 சதவீதம் ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரொக்க கையிருப்பு விகிதம் மற்றும் எஸ்.எல்.ஆர். ஆகியவை முறையே 4 சதவீதம் மற்றும் 19.5 சதவீதம் ஆக உள்ளது.
இதேபோன்று நுகர்வோர் விலை குறியீடை அடிப்படையாக கொண்ட பணவீக்கம், கடந்த மார்ச்சில் இருந்த 5.1 சதவீதம் என்ற அளவை விட பிப்ரவரியில் 4.4 சதவீதம் என்ற அளவில் குறைந்து இருந்தது.
  • 0 comment(s)
Be the first person to like this.