அதலபாதாளத்தில் பங்குச்சந்தை
Posted: Fri,23 Mar 2018 01:00:56 GMT
உலக அளவில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடுமையான சரிவு மற்றும் இந்திய நிறுவங்களின் பங்குகள் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இன்றைய பங்குச்சந்தையில் மிகப்பெரிய சரிவு காணப்பட்டது.
இந்த வாரத்தில் கடைசி வர்த்தக நாளான இன்று, மாலை நிலவரப்படி சென்செக்ஸ் 409.73 புள்ளிகள் சரிந்து 32,596.54 புள்ளிகளாகவும், நிப்டி 116.75 புள்ளிகள் சரிந்து 9998.05 புள்ளிகளாகவும் இருந்தன. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 33,000 புள்ளிகளுக்கு கீழும், நிப்டி 10,000 புள்ளிகளுக்கு கீழும் சென்றுள்ளது. பங்குச்சந்தையில் ஏற்பட்டு வரும் இத்தொடர் சரிவு முதலீட்டாளர்களை கவலை கொள்ளச்செய்துள்ளது.
  • Share
  • 0 Comment(s)