தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரிப்பு: துணை முதல்வர் பேச்சு
Posted: Fri,23 Mar 2018 01:00:07 GMT
தமிழ்நாட்டு மக்களின் தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ தமிழகத்தில், 2011 - 12ம் நிதியாண்டில், தனிநபர் வருமானம், 1 லட்சத்து, 3,600 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால், 2017 - 18ல், இது, 1 லட்சத்து, 88 ஆயிரத்து, 492 ரூபாயாக அதிகரித்துள்ளது.இதன்மூலம், 2011ம் ஆண்டை காட்டிலும், தனிநபர் வருமானம், 85 ஆயிரம் ரூபாய் கூடுதலாகி உள்ளது. எனவே, தமிழகத்தை பொறுத்தவரை, தனிநபர் வருமானம் ஆரோக்கியமான சூழலில் தான் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 comment(s)
Be the first person to like this.