பங்குச்சந்தையில் சரிவு
Posted: Thu,15 Mar 2018 02:50:13 GMT
உத்தரபிரதேச இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள படுதோல்வி, அதன் காரணமாக நிதித்துறை, வங்கிகள், எரிபொருள் மற்றும் எண்ணை நிறுவன பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக இன்றைய பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டது.
ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக சென்செக்ஸ் சரிவை சந்தித்தது. முக்கிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததால் நிப்டியும் சரிவை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 150.20 புள்ளிகள் சரிந்து 33,685.54 புள்ளிகளாகவும், நிப்டி 50.70 புள்ளிகள் சரிந்து 10,360.20 புள்ளிகளாகவும் இருந்தன
  • Share
  • 0 Comment(s)