Posted: Wed,14 Mar 2018 05:04:25 GMT
குறுகிய காலத்தில் நூறு படங்களை தயாரித்த பட நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ். மறைந்த இயக்குனர் ராமநாராயணனின் சொந்த நிறுவனமான இந்நிறுவனம், சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து அதிக லாபம் ஈட்டி வந்த நிறுவனம் ஆகும்.
ஆனால் ராமநாராயணன்மறைவுக்கு பிறகு பெரிய பட்ஜெட் படங்களை எடுக்க தொடங்கியது. சுந்தர் சி இயக்கத்தில் சங்கமித்ரா என்ற படம் தொடங்கப்பட்டு முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நிறுத்ப்பட்ட வகையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதே போல் அந்நிறுவனம் தயாரித்த மெர்சல் படம் நன்றாக ஓடியும், செலவு அதிகரித்ததால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது.
இதன் காரணமாக நிதிச்சிக்கலில் தத்தளிக்கும் இந்நிறுவனம் தொடங்கவிருந்த பல படங்களை கைவிட்டுள்ளது. அதில் ஒன்று தனுஷ் நடிப்பில் தயாரகவிருந்த சரித்திர படமான ‘நான் ருத்ரன்’. தனுஷின் கனவுப்படமான இப்படத்தை தேனாண்டாள் நிறுவனம் கைவிட்டதால், அப்படத்தின் தயாரிப்பு பொறுப்பை தன்னுடைய வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கவிருக்கிறார் தனுஷ்.
  • 0 Comment(s)
Be the first person to like this