மிஷ்கின் இயக்கத்தில் சாந்தனு
Posted: Wed,14 Mar 2018 05:03:03 GMT
துப்பறிவாளன்’ படத்தையடுத்து மிஷிகின் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் சாந்தனு பாக்யராஜ். லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
மிஷ்கின் படத்தில் நடிப்பது குறித்து பத்திரிக்கை பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கும் சாந்தனு, “எல்லாமே கனவு போல இருக்கிறது. நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. என்னை மாதிரி ஒவ்வொரு நடிகரும், மிஷ்கின் மாதிரியான சிறந்த இயக்குநர்களின் போனுக்காகத்தான் காத்துக் கொண்டிருப்பார்கள்.
லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்திரன் சாருக்கு மிகப் பெரிய நன்றி. என்னை வைத்து படம் பண்ண ஓகே சொன்ன மிஷ்கின் மற்றும் பி.சி.ஸ்ரீராம் சாருக்கு நன்றி. கடின உழைப்பு, இத்தனை வருடக் காத்திருப்பு எல்லாவற்றையும் தாண்டி, என்னைச் சுற்றி இருப்பவர்கள், எனக்காக வேண்டிக் கொண்டவர்களின் பலனாகத்தான் இந்தப் படம் கிடைத்திருக்கிறது. அவர்களுக்கும் நன்றி”, என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)