Posted: Wed,14 Mar 2018 05:01:30 GMT
சிறிய வேடங்களில் நடித்து வந்த நடிகர் தினேஷை தான் இயக்கிய முதல் படமான அட்டகத்தி முலம் நாயகனாக்கியவர் ரஞ்சித். அந்த வகையில் இருவருக்குமே அட்டகத்திதான் முதல் படம் என்று சொல்லலாம்.
தற்போது ரஜினி படங்களை இயக்கி தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராகிவிட்ட ரஞ்சித், தன்னுடைய முதல் நாயகனான தினேஷ் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்.
ஆதித்யன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. விரைவில் பெயர் மற்றும் மற்ற விபரங்கள் வெளியிடப்படும் எனத்தெரிகிறது.
தற்போது அட்டகத்தி தினேஷ் அண்ணனுக்கு ஜே’உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
  • 0 Comment(s)
Be the first person to like this