ரஜினி குடும்பத்துக்கு 50 கோடி லாபம்
Posted: Wed,14 Mar 2018 04:59:48 GMT
ரஞ்சித் இயக்கத்தில் இரண்டாவது முறையாக ரஜினி நடித்துள்ள படம் காலா. இப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் குறுமுன்னோட்டம் வெளியிடப்பட்டது. ஒரே நாளில் ஒரு கோடியை தாண்டி சாதனை படைக்கும் என சொல்லப்பட்ட இம்முன்னோட்டம் ஒரு கோடியை தொடமுடியவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் விற்பனை மூலம் ரஜினி குடும்பத்துக்கு 50 கோடிகள் லாபம் கிடைத்துள்ளது. 75 கோடி பொருட்செலவில் தயாரான இப்படத்தை தனுஷ் தன்னுடைய வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் 125 கோடிகளுக்கு கைப்பற்றியுள்ளது. வெளீயீடு, விளம்பர செலவுகள் என்று ஏதும் இல்லாமல் நிகரலாபம் 50 கோடிகள் தனுஷுக்கு கிடைத்துள்ளது.
  • Share
  • 0 Comment(s)