சாய் பல்லவி குறித்த வதந்திகள்: மறுப்பு தெரிவித்த அமைச்சர்
Posted: Wed,14 Mar 2018 04:59:13 GMT
பிரேமம் படம் மூலம் உலக அளவில் புகழ் பெற்ற நடிகை சாய்பல்லவி. இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் நடித்து வருகிறார். இந்நிலையில் சாய் பல்லவியும், நடிகரும், ஆந்திரா கல்வித்துறை அமைச்சர் கண்டா ஸ்ரீனிவாஸ் ராவின் மகனுமான கண்டா ரவி என்ற ரவி தேஜாவும் காதலிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
ஆனால் இச்செய்திகளை கண்டா ரவியின் தந்தையும் ஆந்திர மாநில அமைச்சர்மான கண்டா ஸ்ரீனிவாஸ் மறுத்துள்ளார். இது குறித்து பேசி இருக்கும் அவர், “சாய் பல்லவியும், என் மகனும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஆதாரம் இல்லாமல் இது போன்ற வதந்திகளை எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வழக்கமாக வதந்திகளை நான் கண்டுகொள்வது இல்லை. ஆனால் இது இரண்டு பேரின் வாழ்க்கை பற்றியது. என் மகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி இப்படி வதந்தியை கிளப்புகிறார்களோ” என்று தெரிவித்துள்ளார்
சாய் பல்லவியும் கண்டாரவியும் இதுவரை ஒன்றாக நடித்தில்லை அதுமட்டுமல்லாமல் இதுவரை ஒருமுறை கூட இருவரும் நேரில் சந்தித்ததில்லை என கண்டாரவியின் மேளாலர் தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)