ரஜினி பகுதி நேர அரசியல்வாதி: அமைச்சர் கிண்டல்
Posted: Wed,14 Mar 2018 04:06:40 GMT
இமயமலையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ரஜினி செய்தியாளர்களிடம் பேசும்போது, இது ஆன்மீக பயணம் இங்கு அரசியல் பேசவிரும்பவில்லை என்றும், மேலும் தான் இன்னும் முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
ரஜினியின் இந்த பேட்டி குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கும் அமைச்சர் ஜெயக்குமார், “நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலில் ஈடுபட்டுள்ளதால் அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்ப்பதாக கூறுகிறார். உலகத்திலேயே அரசியல்வாதிகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆன்மிகவாதிகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அரசியலில் ஒரு பகுதிநேர அரசியல்வாதி என்று கண்டுபிடித்த ஒரே ஆன்மிக ஞானி ரஜினிதான்.
இன்னும் 3 மாதத்தில் கழித்து அரசியலில் தற்காலிக ஊழியராக இருப்பேன் என்பார். பார்ட் டைம் அரசியல்வாதி என்று கண்டுபிடித்தவர் ரஜினிதான்” என்று கிண்டல் செய்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)