ஆட்டு ஈரல் சூப்
Posted: Wed,14 Mar 2018 03:59:01 GMT
சூப் என்றதும் நினைவுக்கு வருவது சிக்கன் சூப் மற்றும் ஆட்டுக்கால் சூப்தான். ஆனால் ஆட்டு ஈரல் சூப் சுவையாக இருப்பதுடன் உடலுக்கும் மிக நல்லது. மிக எளிமையாக குறைந்த நேரத்தில் இத சூப்பை தயார் செய்யலாம்
தேவையான பொருட்கள்
ஆட்ட்டு ஈரல் – 150 கிராம்
சின்ன வெங்காயம் - 5
மிளகு – அரை தேனீர் கரண்டி
சீரகம் - அரை தேனீர் கரண்டி
மிளகுத்தூள் - அரை தேனீர் கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேனீர் கரண்டி
பூண்டு – 5 பல்
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணை, கடுகு – சிறிதளவு
செய்முறை: ஈரலை சிறிய துண்டுகளாக்கி நன்கு கழுவி வைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை அம்மியில் வைத்து மைபோல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு, கடுகு தாளிக்கவும், கறிவேப்பிலை சேர்க்கவும். வெட்டி வைத்துள்ள ஈரலை சேர்த்து கிளறவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் மூடி வைக்கவும், அரைத்து வைத்த கலவையை சேர்த்து நீர் ஊற்றி கொதிக்க விடவும். ஈரல் எளிதில் வெந்துவிடும் என்பதால் 10 நிமிடத்தில் சூப் தயாராகிவிடும். கொத்தமல்லி இலை, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
  • Share
  • 0 Comment(s)