மக்களின் கோவம்தான் பாஜகவின் தோல்விக்கு காரணம்
Posted: Wed,14 Mar 2018 03:56:49 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் அரிதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி செய்து வரும் பாஜகவுக்கு, இடைத்தேர்தலில் பலத்த அடி கிடைத்துள்ளது.
பாஜகவின் இத்தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ”உத்தரப்பிரதேச மக்கள் பா.ஜ.க மீது கோபத்தில் இருப்பது இடைத்தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளது. உ.பி.யில் பாஜக மீதான கோபம் காரணமாக மாறுதலுக்காக சமாஜ்வாதி கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன், ”உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலிமையாக கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவோம்” என்றும் அவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)