Posted: Wed,14 Mar 2018 03:55:34 GMT
மதுரை மேலூரில் நாளை டிடிவி தினகரன் தனது அணியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்த உள்ளார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட தினகரன் ஆதரவாளர்கள், மக்கள் கூட்டத்தை கூட்ட வித்தியாசமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், “ 15.3.2018 அன்று மதுரை மாவட்டம் மேலூரில் கழக அமைப்பின் பெயர் அறிவிப்பு, கட்சி கொடி அறிமுக விழா காலை 9 மணிக்கு துவங்க இருக்கிறது.
எனவே சிரமம் பார்க்காமல் கழகத்தினர் காலை 3 மணிக்கு எஎழுந்து புறப்பட்டு 7 மணிக்குள் மேலூர் வந்து அடைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். காலை 5.30 மணி முதல் தங்களுக்கு காலை உணவு மதுரை திருமங்கலம் சுங்கச்சாவடி அருகில் உள்ள ஓட்டலில் தயார் நிலையில் இருக்கும்.
காலை உணவு பார்சல், தண்ணீர் ரெடியாக இருக்கும் அதனை பெற்றுக் கொண்டு சற்றும் தாமதிக்காமல் 7 மணிக்குள் நிகழ்ச்சி நடைபெறும் மேலூர் மைதானம் வந்து அமைந்து அங்கே அருகில் அமர்ந்து உணவுகளை அருந்திக் கொள்ளலாம். நம் மாவட்ட வருகை முதன்மையாக இருக்க ஒத்துழைப்பு தாருங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 0 Comment(s)
Be the first person to like this