Posted: Wed,14 Mar 2018 03:54:46 GMT
உத்தர பிரதேச மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ஆதித்யா நாத் மற்றும் கேசவ பிரசாத் மௌரியா ஆகியோர் அம்மாநிலத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து இருவரும் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.
இதன் காரணமாக காலியான கோரக்பூர் மற்றும் புல்பூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக படு தோல்வியடைதுள்ளடு. கோரக்பூர் தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யா நாத் ஏற்கனவே 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் கோட்டையை உடைத்து இரண்டு தொகுதிகளிலும் சமாஜ்வாடி வெற்றி பெற்றுள்ளது.
இத்தோல்வி குறித்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத், “புல்பூர், கோரக்பூர் இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன், சமாஜ்வாடி, பகுஜன் சமாஸ் கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே இத்த தோல்விக்கு காரணம். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். இடைத்தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து ஆராயப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this