Posted: Wed,14 Mar 2018 03:53:50 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கோரக்பூர் மற்றும் பூல்பூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இத வெற்றி குறித்து பேசியிருக்கும் சமாஜ்வாட் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், “வெற்றிக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இரு தொகுதிகளும் முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரியுடையது. இரு தொகுதியில் மட்டுமே மக்கள் கோபம் இவ்வளவு இருக்கும் நிலையில் பிற பகுதியில் எப்படி இருக்கும் என பார்த்துக்கொள்ளுங்கள். பாரதீய ஜனதாவிற்கு பொதுமக்கள் சரியான பதிலடியை கொடுத்து உள்ளார்.
உத்தரபிரதேச மாநில இடைத்தேர்தல் முடிவானது லட்சக்கணக்கான மக்களின் அரசியல் செய்தியை அனுப்பி உள்ளது. அரசு மீது மக்கள் மத்தியில் பெரும் அவநம்பிக்கை உள்ளது, இந்த முடிவே அதற்கு அடையாளமாகும். மோடி அரசின் மீது மக்கள் மகிழ்ச்சியற்று உள்ளனர். ஜிஎஸ்டி அதிகமான மக்களின் வேலைவாய்ப்பை பறித்துவிட்டது, தொழிலையும் பாதித்துவிட்டது. சமூக நீதிக்கான வெற்றியாகும். பாரதீய ஜனதா ஒருபோதும் அதனுடைய வாக்குறுதியை நிறைவேற்றியது கிடையாது” என்று பேசியுள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this