Posted: Wed,14 Mar 2018 07:45:12 GMT
மகாராஷ்ட்ர மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக சார்பில் போட்டியிட நாராயண ரானே வுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாராயண ரானே, சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது காங்கிரஸில் இருந்து விலகி தற்போது பாஜகவில் சேர்ந்துள்ளார்.
நாராயண ரானேவுக்கு சீட் கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பி இருக்கும் சிவசேனை கட்சி, “பா.ஜ.விற்கு வேறு வேட்பாளர்களே கிடைக்கவில்லையா. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாராயணரானே சமீபத்தில் பா.ஜ. வில் இணைந்தார். அவர் அடிப்படை உறுப்பினராக இருக்க வாய்ப்பில்லை அவருக்கு பா.ஜ. சீட் கொடுத்தது எப்படி, வேட்பு மனு தாக்கலில் எந்த விதிமுறையின் கீழ் வேட்பு மனு செய்வார் என்று சிவசேனை கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
  • 0 Comment(s)
Be the first person to like this