Posted: Wed,14 Mar 2018 07:44:07 GMT
2019ம் ஆண்டு நடைபெற உள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் வகையில் காங்கிரஸ் சார்பில் தேனிர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
சோனியா காந்தியின் வீட்டில் நடைபெற்ற இந்த தேனிர் விருந்தில் திமுக சார்பில் கனிமொழி கலந்து கொண்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார், சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் சந்திர மிஸ்ரா மற்றும் முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, பாபுலால் மராண்டி, ஹேமந்த் சோரன், ஜித்தன் ராம் மாஞ்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஜேடியூவின் சரத் யாதவ், ராஷ்ட்ரீய லோக் தளத்தின் அஜித் சிங், ஆர்ஜேடியை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் மாநிலங்களவை எம்பியான மிசா பார்தி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுதீப் பந்தோப்யாய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி ராஜா மற்றும் முகமது சலீம் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்நி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அகமது படேல், ஏகே அந்தோணி, ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இவ்விருந்தில் கலந்து கொண்டனர்.
  • 0 Comment(s)
Be the first person to like this