Posted: Wed,14 Mar 2018 07:43:32 GMT
ஆன்மீக அரசியல் செய்யப்போகிறேன் என்று சொன்ன ரஜினி, அரசிலில் இருந்து விலகி இருப்பதற்காக ஆன்மிக பயணம் சென்றுள்ளார். இமயமலையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ரஜினி, தமிழ்நாட்டில் நடைபெற்ற குரங்கணி தீவிபத்து குறித்த கேள்விகு பதிலளிக்க மறுத்து, ஆன்மீக பயணத்தில் இருக்கிறேன் அரசியல் பேசப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். குரங்கணி தீவிபத்து அரசியல் அல்ல என்றும் பொது மக்களின் கண்ணீர் என்று கூட ரஜினிக்கு தெரியவில்லை, அதே சமயம் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உடல் நலம் தேற வாழ்த்து தெரிவித்துள்ள்ளார்.
இந்நிலையில் இமயமலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ரஜினி, “பொதுவாழ்வில் தியாகங்கள் செய்ய வேண்டியது அவசியம், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலை தேர்வு செய்தேன். மக்களுக்காக வாழ்கிற வாழ்வில் அர்த்தம் உள்ளது. ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடுவேன். '' என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this