Posted: Wed,14 Mar 2018 07:42:15 GMT
இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார். காலப்பயணம், பெருவெடிப்பு உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் இவர் பங்கு மகத்தானது. இவர் மறைவுக்கு உலகமே இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்த செய்தி வேதனை அளிக்கிறது. அவரது புத்தி கூர்மை நமது உலகத்தையும் பிரபஞ்சத்தையும் மர்மம் விலகிய இடங்களாக வைத்தன. அவரது விடா முயற்சியும் தைரியமும் வருங்கால தலைமுறைக்கு முன்மாதிரியாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “ஸ்டீபன் ஹாக்கிங் மிக சிறந்த விஞ்ஞானி மற்றும் கல்வியாளர் ஆவார். அவரது விடா முயற்சி உலக மக்களை ஈர்த்தது. அவரது மரணம் கவலையை அளிக்கிறது. ஹாக்கிங்கின் முன்னோடி பணிகள் நமது உலகை சிறந்த நிலைக்கு கொண்டு சென்றது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this