Posted: Tue,13 Mar 2018 05:48:18 GMT
விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் சிம்பு. இந்நிகழ்ச்சியில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார் சிம்பு.
த்ரிஷா குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிம்பு, “ த்ரிஷாவை சிறு வயதில் இருந்தே தெரியும். த்ரிஷா நடிக்க வருவார் என்று தெரியாது. ஒரு நாள் திடீர் என்று ஹீரோயினாகிவிட்டார். ஹீரோயினாகிவிட்டால் இருக்கும் பந்தா எதுவும் த்ரிஷாவிடம் கிடையாது என்கிறார் சிம்பு.
எது பற்றி வேண்டுமானாலும் நான் த்ரிஷாவிடம் பேசலாம். அதே போன்று அவரும் என்னுடன் பேசலாம். இது நட்பும் அல்ல, காதலும் அல்ல, ஒரு வகையான அன்பு, ஆதரவு என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this