Posted: Tue,13 Mar 2018 05:47:24 GMT
நடிகை ஸ்ரீதேவியின் 16ம் நாள் பிரார்தனை கூட்டம் நேற்று முன் தினம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அஜீத் தன் மனைவி ஷாலினியுடன் வந்து கலந்து கொண்டார். சூர்யா, ஜோதிகா, சிவகுமார், ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவா, கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஆனால் ஸ்ரீதேவியுடன் புலி படத்தின் இணைந்து நடித்த விஜய் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அதற்கான காரணம், வரும் 16ம் தேதி முதல் படப்பிடிப்புகளை நடத்த தயாரிப்பாளர் சங்கம் தடைவிதித்துள்ள நிலையில், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 62 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடிந்தவரை விரைந்து முடிக்க திட்டமிட்டு கடுமையாக உழைத்து வருகிறது படக்குழு. இதன் காரணமாகவே விஜய், ஸ்ரீதேவியின் 16ம் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
  • 0 Comment(s)
Be the first person to like this