Posted: Tue,13 Mar 2018 05:45:57 GMT
கியூப், யூஎஃப்ஓ, பிஎஸ்டி உள்ளிட்ட எண்ணியல் நிறுவனங்களை எதிர்த்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளார் சங்கம். வரும் 16ம் தேதிமுதல் படப்பிடிப்புகளையும் நிறுத்தப்போவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள நிலையில், இப்பிரச்சினையில் கமல்ஹாசன் மற்றும் ரஜினி இருவரும் பாராமுகமாக இருப்பதாக தயாரிப்பாளார் ஜே.எஸ்.கே சதீஸ் மறைமுகமாக குறிபிட்டுள்ளார்.
இப்பிரச்சினை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலுக்கு உயர்த்திக் கொண்ட உச்ச நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள். ஏற்றி விட்ட ஏணி இப்போது சீக்கு வந்த யானையாக தவிக்கிறது. நீங்கள் இருவரும் ஆண்டு அனுபவித்து ஆஸ்தி சேர்க்க அனைத்துமாக இருந்த திரைத்துறையின் இன்றைய இன்னல்களை உங்கள் சேவையால், பார்வையால் காப்பாற்ற ஏதேனும் செய்து விட்டு உங்கள் அரசியல் பயணத்தை துவங்குங்கள்.
நாங்கள் உடன் இருப்போம். யோசித்து உடனே வாருங்கள். கவலையோடு அல்லாடிக் கொண்டிருக்கிறது கலைக்குடும்பம்... கோடம்பாக்க சேவையே இப்போதைய தேவை”. என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this