ஸ்ரீதேவி மரணம் குறித்து அவர் தங்கை மௌனமாக இருப்பது ஏன்?
Posted: Tue,13 Mar 2018 05:33:59 GMT
மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவருடைய கணவர் போனி கபூரால் கொடுமைப்படுத்தப்பட்டார் எனவும், ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதா, ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்களின் போது உடனருந்தார் ஆனால் அவர் இதுவரை வாய் திறக்கவில்லை எனவும் அடுக்கக்கான குற்றச்சாட்டுகக்ளை வேணுகோபால் ரெட்டி என்பவர் தெரிவித்திருந்தார்.
வேணுகோபால் ரெட்டியின் குற்றச்சாட்டுகள் குறித்து தெரிவித்திருக்கும் ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதாவின் கணவர் சஞ்சய் ராமசாமி. “எனக்கும், ஸ்ரீலதாவுக்கும் திருமணமாகி 28 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை வேணுகோபால் ரெட்டி என்ற பெயரை கேள்விப்பட்டதே இல்லை. அந்த நபர் போனி கபூர் பற்றி கூறியதில் உண்மை இல்லை.
துயரமான இந்த நேரத்தில் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. மொத்த குடும்பமும் போனி கபூருக்கு ஆதரவாக உள்ளது. என் மனைவி ஏன் அமைதியாக இருக்கிறார் என்று சில ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
தங்கள் குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால் அமைதியாக இல்லாமல் சுவர் மீது ஏறி கத்திக் கொண்டா இருக்க முடியும். நாங்கள் பப்ளிசிட்டி தேடாமல் அமைதியாக இருப்பதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். எங்கள் குடும்பத்தாருக்கு ஸ்ரீதேவி முன்மாதிரியானவர். அவர் மீது அதிக அன்பு வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)