Posted: Tue,13 Mar 2018 05:33:28 GMT
கீயூப் உள்ளிட்ட எண்ணியல் நிறுவனங்களுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. அதன் படி கடந்த இரண்டு வாரங்களாக புதிய படங்கள் ஏதுவும் வெளியாகவில்லை. அதே போல் படத்தொடக்க விழா, செய்தியாளர் சந்திப்பு, இசைவெளியீட்டு விழா உள்ளிட்ட எந்த விழாக்களையும் நடத்தவும் தயாரிப்பாளர் சங்கம் தடைவிதித்துள்ளது.
ஆனால் தடையை மீறி விழா நடத்தியதால், ஸ்டூடியோ க்ரின் நிறுவனத்தின் ஞானவேல் ராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ’ரெட்’ போட்டுள்ளது. தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகும் நோட்டா படத்தை தயாரிக்கும் ஞானவேல்ராஜா, அப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பை சென்னையில் நடத்தினார்.
எந்த திரைப்பட நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது என்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவை மீறியதால் ஞானவேல் ராஜாவுக்கு தடை வித்தித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். விழா நடத்தியது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார் ஞானவேல் ராஜா, இதன் காரணமாக தடை நீக்கப்படலாம் எனத்தெரிகிறது.
  • 0 Comment(s)
Be the first person to like this