வதந்திகளை மறுக்கும் கௌதமி
Posted: Tue,13 Mar 2018 05:32:09 GMT
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படமான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் மறு ஆக்கம் செய்கிறார் பாலா. இப்படத்தில் நாயகனாக விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அச்செய்திகளை கௌதமி மறுத்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கௌதமி, “என் மகள் நடிக்க வருவதாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சுப்புலட்சுமி படிப்பில் கவனம் செலுத்துகிறார். தற்போது நடிக்கும் திட்டம் இல்லை. அவரை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)