Posted: Tue,13 Mar 2018 04:22:48 GMT
திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக பாஜக தலைவரான தமிழிசை, “கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை உறுப்பினராக சேர்த்துள்ளதாகவும், கிடைக்கும் மின்னஞ்சல் முகவரிகளை கொண்டு உறுப்பினராக்கி கொள்வதா என்றும் கொந்தளித்திருந்தார்.
ஆனால் சில மணிநேரங்களில்யேயே தமிழிசை முகத்தில் கரியை பூசிவிட்டது மக்கள் நீதிமய்யம். தமிழிசையின் குற்றச்சாட்டு குறித்து மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே ...நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா ?
ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது . அதுவரை ... பதிவு செய்தமைக்கு நன்றி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழிசை தன் தொலைபேசி, மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட அனைத்தும் கொடுத்து மக்கள் நீதி மய்யம் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை தமிழக பாஜக தலைவர்கள் அனைவருமே தங்கள் சொல்பேச்சு கேட்காத அட்மின்களை வைத்திருக்கிறார்களோ?
  • 0 Comment(s)
Be the first person to like this