பாஜகவை சாடும் சந்திரபாபு நாயுடு
Posted: Tue,13 Mar 2018 04:20:10 GMT
பாஜக கூட்டணியில் இருண்டு வெளியேறியுள்ள ஆந்திர முதல்வர், பாஜக அரசு மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். ஆந்திர சட்டமன்றத்தில் பேசிய அவர், “ மத்திய அரசுக்கு அதிகமான அளவு வருவாயை கொடுக்கும் மாநிலங்களாக தென் இந்திய மாநிலங்கள் உள்ளது, ஆனால் வடமாநிலங்களின் வளர்சிக்கு மட்டுமே அவை பயன்படுத்தப்படுகிறது,” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “ ஆந்திர மாநில பிரிவின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தொடர்ந்து ஆந்திர பிரதேசம் புறக்கணிக்கப்படுகிறது. ஆந்திர பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி கிடையாதா? ஏன் இந்த பாகுபாடு. தொழில்துறை வரி சலுகைகள் மற்றும் ஜிஎஸ்டி ரிபண்ட் பிற மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் நிலையில், ஆந்திராவிற்கு மட்டும் அது ஏன் கிடையாது? இதில் மத்திய அரசின் பணம் மற்றும் மாநில அரசின் பணம் என்றெல்லாம் கிடையாது. வருமானம் அனைத்தும் இந்திய மக்களுடையது” என்று தெரிவித்தார்.
அத்துடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை குற்றம் சாட்டிய சந்திரபாபு நாயுடு “மக்களின் உணர்ச்சிக்காக சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என அருண் ஜெட்லி கூறிஉள்ளார். உணர்ச்சியின் அடிப்படையில் மாநிலத்தை பிரிக்க முடியும்போது, அதே உணர்ச்சியின் அடிப்படையில் ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது?,” என்று கேள்வி எழுப்பினார்
  • Share
  • 0 Comment(s)