”டிடிவி தினகரன் தொடங்கும் கட்சி தற்காலிகமானதுதான்”, திவாகரன் பேட்டி
Posted: Tue,13 Mar 2018 04:18:55 GMT
டிடிவி தினகரன் நாளை மறுநாள் மதுரையில் தன்னுடைய புதிய கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன், புதிய கட்சி எதற்கு என்று விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ வருகிற 15ம் தேதி தினகரன் கட்சி தொடங்க இருப்பது தற்காலிக அடையாளம் மட்டுமே. வரக்க்கூடிய தேர்தலை சந்திப்பதற்கு ஒரு அடையாளம் தேவை என்பதால் இந்த தற்காலிக கட்சியை தொடங்க இருக்கிறார்.
அதிமுகவின் கட்சி மற்றும் சின்னத்தை மீட்கும் வரை இந்த தற்காலிக அடையாளம் இருக்கும். இந்த கட்சி தொடங்குவது காலதாமதமான முடிவு அல்ல சரி நேரத்தில் தான் தொடங்க உள்ளோம். சசிகலா சிறையில் விதிமுறைகளை மீறுவதாக வரும் தகவல் பொய்யானது. விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் அவர் நடந்து வருகிறார்” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)