Posted: Tue,13 Mar 2018 04:13:33 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் கலியாகியுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிருகிறார் அமிதாப் பச்சனின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஜெயாபச்சன்
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்த ஜெயாபச்சன் தனக்கு 1000 கோடிகள் சொத்து இருபதாக கணக்கு தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜெயாபச்சனின் சொத்து விபரம் இங்கே:
ஜெயாபச்சன் மற்றும் அமிதாப்பச்சன் தம்பதியினருக்கு ரூ. 460 கோடி அசையா சொத்துக்களும், ரூ.650 கோடி அசையும் சொத்துக்களும் உள்ளன. தவிர நொய்டா, போபால், லக்னோ, அகமதாபாத்,காந்திநகரில் நிலங்கள்.
அமிதாப்பின் நகைகளின் மதிப்பு ரூ. 36கோடி எனவும், ஜெயாபச்சன் நகைகளின் மதிப்பு ரூ. 26 கோடி
இருவருக்கும் 12 கார்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 13 கோடி.
ஜெயாபச்சனுக்கு லக்னோவில் 1.22 ஹெக்டேரில் விவசாய நிலங்கள்.இவற்றின் மதிப்பு ரூ. 2.2 கோடி. என ஜெயாபச்சனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி. வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவில் மிகவும் பணக்கார மாநிலங்களவை உறுப்பினர் என்றா பெருமையை பெற்றுள்ளார் ஜெயாபச்சன்.
  • 0 Comment(s)
Be the first person to like this