அபராத தொகையை குறைத்த பாரத ஸ்டேட் வங்கி
Posted: Tue,13 Mar 2018 03:01:17 GMT
பாரத ஸ்டேட் வங்கி , சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்காதவர்களுக்கான அபராத தொகையை குறைத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச சேமிப்பு தொகையை வைத்து பராமரிக்க வேண்டும், அப்படி பராமரிகாத பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு பலத்த எதிர்ப்பு நிலவியது.
இந்நிலையில் அபராத தொகையை 75 சதவீதம் வரை குறைத்துள்ளது. இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ குறைந்த பட்ச இருப்பு தொகையை பராமரிக்காத, மெட்ரோ மற்றும் பெருநகர பகுதி வாடிக்கையாளர்களுக்கு வசூலிக்கப்பட்ட அபராத தொயைான ரூ.50 (ஜிஎஸ்டி தனி) ஆனது, ரூ.15 (ஜிஎஸ்டி தனி) ஆக குறைக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசூலிக்கப்பட்ட அபராத தொகையான ரூ.40 (ஜிஎஸ்டி தனி) முறையே ரூ.12 (ஜிஎஸ்டி தனி) மற்றும் ரூ.10 (ஜிஎஸ்டி தனி) ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)