கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
Posted: Tue,13 Mar 2018 03:00:05 GMT
தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வரும் நிலையில், தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், ”இந்திய பெருங்கடல், தென் மேற்கு வங்கடல் மற்றும் தெற்கு இலங்கை கடல் இலங்கை மற்றும் குமரிக்கடல் மாலத்தீவை ஒட்டிய பகுதியில் நிலவி வந்த குறைந்த அழுத்த தாழ்வு பகுதி , தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று , மாலத்தீவுக்கு கிழக்கே 290 கி.மீட்டர் வேகத்தில் மேலும் லட்சத்தீவு நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தென்தமிழகத்தில் 13, 14 தேதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. வடக்கு தமிழகத்தில் லேசான மழை பெய்யலாம்.
குமரி மாவட்ட மீனவர்கள் 13, 14, 15 தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம். குறிப்பாக மாலத்தீவுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் , அதிகப்பட்சமாக பாபநாசத்தில் 4 செ.மீ, மழையும், தொண்டியில் 2 செ.மீ., சிவகாசி, இளையான்குடியில் தலா ஒரு செ.மீ., மழையும் பெய்துள்ளது. என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)