பணமோசடியில் நிதியமைச்சர் மகளுக்கு தொடர்பு: ராகுல் குற்றச்சாட்டு
Posted: Tue,13 Mar 2018 02:59:24 GMT
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற பண மோசடியில், நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் மகளுகு தொடர்பு இருபது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ வங்கி மோசடியில் சிக்கியுள்ள குற்றவாளிகள், சிலர் வெளிநாடு தப்பி ஓடுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக ஜெட்லியின் மகளான வக்கீல், தனது சட்ட ரீதியான பணிக்காக பெரும் தொகையை குற்றவாளிகளிடம் பெற்று இருக்கிறார்.
எனவே தான் மத்திய அமைச்சர் ஜெட்லி வங்கி மோசடி விவகாரத்தில் வாய் திறக்க மறுக்கிறார் என்பது தற்போது தெரிகிறது. சட்ட நிறுவனங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வருவது போன்று ஜெட்லி மகளின் சட்ட நிறுவனத்தில் சி.பி.ஐ. ஏன் சோதனை நடத்தக்கூடாது?” ராகுல் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)