வைகோவை கிண்டல் செய்த ஜெயக்குமார்
Posted: Tue,13 Mar 2018 02:57:41 GMT
ஜெயக்குமார் ஊடகங்களில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சில நாட்கள் முன்பு தெரிவித்திருந்தார். வைகோ இவ்வாறு ககூறி இருப்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடன் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “நான் மதிக்கக் கூடிய அண்ணன் வைகோ. அவர் ஏன் என்னை அப்படி சொன்னார். அவர் பிறக்கும் போதே லவுட் ஸ்பீக்கருடன் பிறந்தவர், நான் லவுட் ஸ்பீக்கருடன் பிறக்கவில்லை. நானாக யாரிடமும் கருத்து சொல்லவில்லை.
கட்சியின் சார்பாகவும் அரசின் சார்பாகவும் தான் நான் பேசுகிறேனே தவிர வீணாக ஊடகங்கள் முன்பு வீரவசனம் பேசுபவன் கிடையாது. அந்த வீரவசனம் பேசும் பழக்கம் அண்ணனுக்கு மிக அதிகமாகவே உண்டு” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)