Posted: Tue,13 Mar 2018 02:57:05 GMT
நாட்டையே உலுக்கிய குரங்கணி காட்டுத்தீ குறித்து சத்யராஜ், காணொளி ஒன்றை தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அக்காணொளியில், “ தேனி மாவட்டம், குரங்கணி காட்டு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து, மிகவும் வேதனையை உண்டாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
அதேவேளையில் இனிமேலாவது அனைவரும் இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்.
இனிமேலாவது இதுபோன்ற விபத்துகள் தடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த விபத்து இயற்கையானதா இல்லை செயற்கையானதா என்பதையும் ஆராய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this