அரசின் செயலுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்
Posted: Mon,12 Mar 2018 04:46:53 GMT
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், குரங்கணி தீ விபத்து குறித்து கூறும்போது, ”ஜெயஸ்ரீ என்ற மாணவியின் பெற்றோரிடம் பேசினேன், இதில் யார் மீதும் கோபப்படுவதற்கு இல்லை. இது ஒரு விபத்து தான். அரசும் இந்த நேரத்தில் தேவையான உதவிகளை செய்து வருகிறது.
எல்லா நேரத்திலும் விமர்சனம் செய்யக் கூடாது, இப்போது நம்முடைய நாட்டில் என்ன மீட்புப் பணி செய்ய முடியுமோ அதை நல்ல முறையில் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசுகளுக்கும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு பாராட்டுகள். காணாமல் போனவர்களை தேடி வருகிறார்கள், அதனை அரசு தொடர்ந்து செய்யும் என நம்புகிறோம். பெற்றோருக்கு அனுதாபம் சொல்வதை விட வேறு வழியில்லை. 50 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் என்பது மிகவும் கஷ்டமான நேரம், பெற்றோர் உணர்ச்சிவசப்படாமல் மருத்துவ உதவிக்கு தொந்தரவு செய்யக் கூடாது.
இந்த மாதிரியான நிகழ்வுகள் தான் நமக்கு பாடம் கற்றுத் தரும். இந்த கோர சம்பவத்தை பாடமாக எடுத்துக் கொண்டு இனி இதுபோன்று நிகழாமல் இருக்க செய்ய வேண்டியவற்றை செய்ய வேண்டும். இதற்காக காட்டிற்குள் யாரும் மலையேற்றம் சொல்லக் கூடாது, மலையேற்றம் செய்யப் போகிறவர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)